எல்லாப் பிரச்சனைகளைவிட சொந்த பணப்பிரச்சனை மட்டுமே முக்கியம் என அறிந்து ,தெளிந்து , புரிந்து வாக்களித்த மக்களுக்கு வணக்கம் .
வாழ்த்துக்கள்
எந்த தொழிலை தொடங்கும் போதும், விநாயகரை வழிபட்டு, தொடங்கினால், அந்த தொழில் சிறப்பாக விளங்கும். ஆகவே இங்கு விநாயகர் உருவத்தை வைத்து உள்ளோம்.நாளை முதல் புதிதாக தொழில் தொடங்க உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். பல சேவைகள் செய்து, பல கோடிகள் சேர்த்து, பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பல்லாண்டு, பல நூறாண்டு வாழ எல்லாம் வல்ல விநாயகரை வழிப்பட்டு தொழிலை தொடங்கும் படி அன்புடன் வேண்டுகிறோம் .
கட்சிகளும், அவை வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகளும்
இந்த பட்டியல் வெற்றி பெரும் வாய்ப்பினை மட்டுமே குறிப்பிடுகிறது,
தமிழகம் மற்றும் புதுவையில்
திமுக வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
மத்திய சென்னை திரு.தயாநிதி
நாமக்கல் திரு.காந்திசெல்வன்
நீலகிரி திரு.ராசா
கரூர் திரு.பழனிசாமி
பெரம்பலூர் திரு.நெபோலியன்
நாகப்பட்டினம் திரு.விஜயன்
மதுரை திரு. அழகிரி
கன்னியாகுமரி திருமதி.ஹெலன் டேவிட்சன்
காங்கிரஸ் வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
காஞ்சிபுரம் திரு .விஸ்வநாதன்
திருச்சி திருமதி சாருபாலா தொண்டைமான்
மயிலாதுறை திரு.மணிசங்கர்
சிவகங்கை திரு.சிதம்பரம்
பாண்டிச்சேரி திரு.நாராயசாமி
விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
சிதம்பரம் திரு.திருமாவளவன்
அதிமுக வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
திருவள்ளூர் திரு வேணுகோபால்
தென் சென்னை திரு.ராஜேந்திரன்
கிருஷ்ணகிரி திரு .நஞ்சே கவுடா
ஆரணி திரு .சுப்ரமணியன்
விழுப்புரம் திரு.அனந்தன்
திருநெல்வேலி திரு.அண்ணாமலை
கடலூர் திரு.சம்பத்
வேலூர் திரு .வாசு
சேலம் திரு.செம்மலை
திருப்பூர் திரு.சிவசாமி
பொள்ளாச்சி திரு.சுகுமார்
திண்டுக்கல் திரு.பாலசுப்ரமணி
தூத்துக்குடி திருமதி .சிந்தியா பாண்டியன்
தேனீ திரு.தங்க தமிழ்செல்வன்
பாமக வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
ஸ்ரீ பெரும்பத்தூர் திரு .மூர்த்தி
அரக்கோணம் திரு.வேலு
தருமபுரி திரு.செந்தில்
திருவண்ணாமலை திரு.குரு
கள்ளகுருச்சி திரு.தனராசு
மதிமுக வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
ஈரோடு திரு.கணேச மூர்த்தி
தஞ்சாவூர் திரு.பாலகிருஷ்ணன்
விருதுநகர் திரு.வைகோ
கம்யூனிஸ்ட் வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
வட சென்னை திரு தா. பாண்டியன்
கோயம்புத்தூர் திரு.நடராஜன்
தென்காசி திரு.லிங்கம்
பிஜேபி வெற்றி பெரும் வாய்ப்புள்ள தொகுதிகள்
ராமநாதபுரம் திரு.திருநாவுக்கரசர்
தேர்தல் முடிவுகள் 2009
இந்த முடிவுகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ 10 சதவிகிதம் அளவுக்கு மாறுபடலாம் .
திமுக கூட்டணி 14
திமுக - 8
காங்கிரஸ் - 5
விடுதலை சிறுத்தைகள் - 1
அதிமுக கூட்டணி 25
அதிமுக - 14
மதிமுக - 3
பாமக - 5
கம்யூனிஸ்ட் - 3
பிஜேபி கூட்டணி
பிஜேபி 1
வேலை வெட்டி இல்லாமல் நான் பாத்த வெட்டி வேலை
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் . இதற்காக நான் பாத்த வெட்டி வேலை, கடந்த ஒரு மாதமாக பல தொல்லை காட்சி செய்திகளை பார்த்து (வெறுத்து ) , பல ஜால்ரா செய்தி தாள்களையும் ,உண்மையான செய்தி தாள்களையும் படித்து கிழித்து , ( பஜ்ஜி கட்டி குடுக்கும் பேப்பரை கூட விடுவதில்லை ) ,பல blog site போய் படித்து பைத்தியம் பிடித்து ,தெரிந்த ,அறிந்த நிருபர்களை தொலை பேசியில் அழைத்து அறுத்து ( இப்போது அவர்கள் என தொலைபேசி எண்ணை பார்த்தல் எடுப்பதில்லை,நம்பர மாத்தனும் ) , பல நாள் முன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்து ( இப்போது இதுதான் பேன்சி) .பல சமுக,இன,மக்கள் பிரச்சனைகளை அலசி(எனது சொந்த பிரச்சனைகள் இதை விட அதிகம் ) நான் எழுதும் "தமிழக மற்றும் புதுவை தேர்தல் முடிவுகள் 2009" .
நாளை வெளியிடப்படும் .
உயிரை உலுகிய குறும் படம்
வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.
http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte
ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.
தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.
படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,
பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.
மீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.
வறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.
ஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும்.
கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி :xavi.wordpress.com
